shivayam siva
Wednesday, 17 July 2013
Monday, 15 July 2013
Sunday, 14 July 2013
Friday, 12 July 2013
வள்ளலார் காட்டிய தீஞ்சுவை நீரோடை
வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது. அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன. வள்ளலார் கரம்பட்டதும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஊற்றாக ஆகிவிட்டது.வள்ளலார் உருவாக்கிய தீஞ்சுவை ஊற்று. இந்த தீஞ்சுவை நீருற்று நீரோடையில் இருந்து வரும் நீர் அருகில் ஏற்ப்படுத்தப்பட்ட குள்ம் போன்ற குட்டையில் நிறுத்திவைக்கப் பட்டு பின் விவசாய நிலத்துக்கு அனுப்ப படுகிறது. அதிகாலை நேரம் மூன்று முதல் நான்கு மணிக்குள் வள்ளலாரை சூட்சும உடலுடன் காண வரும் யோகிகள் சித்தர்கள் சன்மார்க்கிகள் இங்கு சூட்சுமாக நீராடுவதை சுத்த சீவர்கள் கண்ணால் காண்பதும் உணர்வதும் தத்ரூபமானது
Thursday, 11 July 2013
இராமலிங்க அடிகள்{வள்ளலார்)
இராமலிங்க அடிகள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ளவடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
இராமலிங்க அடிகள் கொள்கைகள்[தொகு]
- கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
- புலால் உணவு உண்ணக்கூடாது.
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
திருவருட்பா[தொகு]
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடபட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும்காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)