shivayam siva

Monday, 8 April 2013

பெரியசாமி ஜீவ சமாதி, வேளச்சேரி,சென்னை pic 1--8








பத்து ஆண்டுகளுக்கு முன்பு இது சமாதியாக இருந்தது,அதில் பெரியசாமி,அம்பலவாணர் மற்றும் அம்பலவாணரின் துணைவியார் ஆகிய மூவரின் சமாதிகள் மட்டும் இருந்தன. தியானம் செய்வதற்கு உகந்த அமைதி தவழும் இடமாக இருந்தது.
இப்பொழுது அது கோவிலாக மாற்றம் செய்யப்பட்டு கடவுளர்கள் வந்து அமர்ந்துள்ளனர்.
பொதுமக்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்
அன்னதானமும்  செய்யப்படுகிறது

கோழி பீ சித்தர் ஜீவசமாதி,கிண்டி,சென்னை pic 1--4




கோழி பீ சித்தர் ஜீவசமாதி,கிண்டி,சென்னை
1906 ம் ஆண்டு இவர் ஜீவசமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.இவரது சமாதி கிண்டியில் உள்ள சாய்பாபா கோவிலுக்குள் இருக்கிறது.இது பலருக்கும் தெரியாது.இவரது பெயர் ,ஊர் யாருக்கும் தெரியாது.வயதான களத்தில் கிண்டி வந்து சேர்ந்திருக்கிறார்.அது அப்பொழுது ஒரு கிராமம்.ஒரு பனைமரத்தடியில் பிட்சைக்காரர் போல இருந்திருக்கிறார்.சிறுவர்கள் அவர் மீதூ கோழிபீயை உருண்டையாக உருட்டி எறிந்து விளையாடுவார்கலாம்.அவர் அந்த உருண்டைகளை தங்கமாக மாற்றி திரும்ப சிறுவர்கள் மீது எரிவாராம்.அதனால் அவர் கோழிபீ சித்தர் என்று அழைக்கப் படுகிறார்.யாரும் அருகில் இல்லாத சமயங்களில் கை,கால்கள,தலை ஆகியவை தனி தனியாக பிரிந்து கிடப்பாராம்.யாராவது வந்து விட்டால் முழு உருவமாக மாறி விடுவாராம்